மு.க.ஸ்டாலின் 
உள்ளூர் செய்திகள்

அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் இன்று மலர் அஞ்சலி செலுத்துகிறார்

பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.

மாலை மலர்

சென்னை:

சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டின் சிறப்புக்காக வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர்.

மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப்பெரும் தனயன்.

தென்னகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளினை யொட்டி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் முன்னணியினர் பிப்ரவரி 3-ம் தேதி காலை 8 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.

கொரோனா காலம் என்பதால் பெருங்கூட்டமாக கூடவேண்டாமென கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்...பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்பு