நகை பறிப்பு 
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே மகளிர் சுயஉதவிக்குழு தலைவியிடம் நகை பறிப்பு

திருவள்ளூர் அருகே மகளிர் சுயஉதவிக்குழு தலைவியிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த பூண்டி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் தாரணி. அப்பகுதியில் மகளிர் சுய உதவி குழு தலைவியாக உள்ளார். இவர் திருவள்ளூரில் உள்ள வங்கியில் அடகு வைத்திருந்த செயினை மீட்டு மகள் பிரதீபாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். தாரணி பின்னால் அமர்ந்து இருந்தார்.

புல்லரம்பாக்கம் மாந்தோப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென தாரணி கழுத்தில் அணிந்திருந்த 8பவுன் தங்க நகையை பறிக்க முயன்றனர். இதில் நகை அறுந்தது. 3 பவுன் நகையுடன் கொள்ளையர் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.