உள்ளூர் செய்திகள்

காந்தி ஜெயந்தியன்று மது பாட்டில்கள் விற்ற டிக்-டாக் பெண் பிரபலம் கைது

கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பதாக பொன்னேரி மதுவிலக்கு பிரிவு போலீசருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பொன்னேரி:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கோளூர் காலனியில் வசிப்பவர் தென்றல் சாந்தி (வயது 32). இவர் சமூக வலைதளங்களில் "டிக் டாக்" பிரபலமாக இருந்த காலத்தில் அதிகமாக வீடியோக்களை வெளியிட்டு நடிகையாகவே வலம் வந்தார்.

நேற்றுமுன்தினம் காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருட்டுதனமாக கள்ள சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தென்றல் சந்தி மதுபாட்டிகளை வாங்கி கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பதாக பொன்னேரி மதுவிலக்கு பிரிவு போலீசருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற மதுவிலக்கு போலீசார் தென்றல் சாந்தி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் அவர் மது விற்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் கோளூர் பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT