தூத்துக்குடி துப்பாக்கி சூடு 
உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் விசாரணை ஆணையத்தில் முன்னாள் கலெக்டர் நேரில் ஆஜர்

துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது கூடுதல் எஸ்.பி.யாக பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரி அருண் சக்திகுமார் உள்ளிட்டோர் ஏற்கனவே ஆஜராகி இருந்தனர்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே 33 கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 34-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் நேற்று முன்தினம் தொடங்கியது.

துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது கூடுதல் எஸ்.பி.யாக பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரி அருண் சக்திகுமார் உள்ளிட்டோர் ஏற்கனவே ஆஜராகி இருந்தனர்.

இந்நிலையில் முன்னாள் கலெக்டர் வெங்கடேஷ் இன்று ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரது வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது. 34-வது கட்ட விசாரணை நாளையுடன் நிறைவடைகிறது.