வாலிபர் மாயம் 
உள்ளூர் செய்திகள்

தேனி அருகே ரூ.5 லட்சம் பணத்துடன் வாலிபர் மாயம்

தேனி அருகே ரூ.5 லட்சம் பணத்துடன் மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

தேனி:

தேனி அருகே உள்ள தர்மாபுரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் நாட்ராயன் (வயது 23). கிருஷ்ணசாமி இறந்து விட்டதால் தாயார் கிருஷ்ணம்மாளுடன் வசித்து வந்தார். அவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதத்துக்கு முன்பு நாட்ராயன் தனது தாயாரிடம் தனியாக தொழில் தொடங்கப்போவதாக கூறி ரூ.5 லட்சம் பணம் வாங்கினார்.

அதன் பிறகு அவர் மாயமானார். அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கிருஷ்ணம்மாள் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.