பொன்னேரி:
பொன்னேரி நகராட்சியில் 27 வார்டுகளில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்திற்கான பணிகள் கடந்த 2013ம் ஆண்டு 54 கோடியே 78 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.
குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடைபெற்று வரும் இப்பணிகளை 2016ம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் குறித்த காலத்தல் பணிகள் முடிக்க படாததால் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி திட்ட மதிப்பு 74 கோடியே 78 லட்சமாக அதிகரிக்கப்பட்டது.
மேலும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதோடு, தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமலும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழையின் காரணமாக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குடியிருப்பு பகுதி தெருக்கள் முழுவதும் சேறும் சகதியுமா காணப்படுகிறது.
இதனால் நிலையில் வாகனங்கள் செல்ல வர முடியாததால் நோயாளிகள் அவசரத் தேவைக்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றன.
மேலும் சக்தி நகரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ள தெருக்களில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பாக எனவே தோண்டப்பட்ட பள்ளம் இதுவரை நிறைவடையாததால் தொகுதி மக்கள் சட்டமன்ற அலுவலகத்திற்கு சென்று மனுக்களை கொடுக்க முடியாமல் திரும்பி வருவதாகவும் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பொன்னேரியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை 10 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.