காதல் திருமணம் செய்த வாலிபர் மாயம் 
உள்ளூர் செய்திகள்

ஆசாரிப்பள்ளம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் மாயம்

ஆசாரிப்பள்ளம் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ராஜாக்கமங்கலம்:

ஆசாரிப்பள்ளம் அருகே தளவாய்புரம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ராஜய்யன் மகன் ரகுபான்ஸ் (வயது 32) இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கேரள மாநிலம் மூணாறுக்கு வேலைக்கு சென்ற போது அங்கு ஷீபா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 

பின்னர் அவர் தளவாய்புரத்தில் வசித்து வந்தார். தனது மனைவி ஷீபாவுடன் தற்போது ஆசாரிப்பள்ளம் அருகே காந்தி காலனியில் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றார். வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் வீட்டில் தேடியும் ரகுபான்ஸ் எங்கு சென்றார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. 

மாயமான ரகுபான்ஸ் குறித்து அவரது மனைவி ஷீபா ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.