ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஊனத்தூர் கிராமத்தில் மணி அம்மன் கோவில், கருப்பையா கோவில், அய்யனார் கோவில் ஆகிய கோவில்கள் அருகருகே உள்ளன.
இந்த கோவில்களில் நேற்று வழக்கமாக பூசாரிகள் பூஜை செய்யச் சென்றனர்.
அப்போது கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மர்ம நபர்கள் கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் பூசாரிகள் பாலு கவுண்டர், சுப்பராயன் ஆகியோர் தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரக்களில் கொள்ளையர் உருவங்கள் பதிவாகி உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.