உள்ளூர் செய்திகள்

நெல்லையில் கல்லூரி வளாகத்தில் ஆசிரியர் தற்கொலை

தற்கொலை செய்துக்கொண்ட சுடலை முத்துவின் வீடு, கல்லூரி வளாகத்திற்கு மிக அருகிலேயே உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக சுடலை முத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதிகிறார்கள்.

Suresh K Jangir

நெல்லை:

நெல்லையை அடுத்த பேட்டை செந்தமிழ்நகரை சேர்ந்தவர் கொம்பன். இவரது மகன் சுடலைமுத்து (வயது 30). இவர் நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை பேட்டையில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

இதனை பார்த்து கல்லூரிக்கு சென்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது சுடலைமுத்து மரத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுடலை முத்துவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்துக்கொண்ட சுடலை முத்துவின் வீடு, கல்லூரி வளாகத்திற்கு மிக அருகிலேயே உள்ளது. அவர் அதே கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர் ஆவார்.

குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதிகிறார்கள். இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.