சென்னை:
தலைமைச் செயலகத்தில் குண்டு வைத்திருப்பதாக எஸ்.பி.சி.ஐ.டி. பாதுகாப்பு அலுவலகத்திற்கு வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாலை தலைமைச் செயலக வளாகத்தில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
வெடிகுண்டு எதுவும் இல்லாததால் பின்னர் திரும்பி சென்றனர். கடிதம் அனுப்பிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... தடுப்பூசி போடாதவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை