உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை அருகே தக்காளி பறிக்கச் சென்ற பள்ளி மாணவி கிணற்றில் தவறி விழுந்து பலி

போலீசார் சுப்ரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Maalaimalar

மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்குமாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். விவசாயி. இவரது மகள் சுப்ரியா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவர் இன்று காலை தக்காளி பறிப்பதற்காக அவரது வீட்டின் பின்புறம் தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் மாணவி சுப்ரியா தவறி விழுந்தார். இதில் நீச்சல் தெரியாததால் மாணவி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் மற்றும் சாமல்பட்டி போலீசார் மாணவியின் உடலை மீட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் சுப்ரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் மாணவி சுப்ரியாவின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.