தேர் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சசிகலா சந்தித்து ஆறுதல் கூறினார். 
உள்ளூர் செய்திகள்

தஞ்சை களிமேட்டில் சாலை உயர்த்தபட்டதே தேர் விபத்துக்கு காரணம்- சசிகலா குற்றச்சாட்டு

தஞ்சை அடுத்த களிமேட்டில் நடைபெற்ற தேர் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சசிகலா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தஞ்சை அடுத்த களிமேட்டில் தேர் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தில் 11 பேர் இறந்தனர். 17 பேர் பலத்த காயம் அடைந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சிகிச்சை பெறுபவர்களை இன்று மதியம் சசிகலா சந்தித்து ஆறுதல் கூறினார். சிகிச்சை அளிக்கப்படும் விவரங்களை டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, களிமேடு கிராமத்தில் சாலை விரிவுப்படுத்தப்பட்டு புதிதாக தார்சாலை போடப்பட்டுள்ளது. அப்போது ஒன்றரை அடி உயரத்துக்கு சாலை உயர்த்தப்பட்டது.

இதனால் மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி தாழ்வாக மாறியது. இதன் காரணமாக விபத்து நடந்துள்ளதாக அறிகிறேன். சாலை உயர்த்தும் போதே இதுபோன்ற பிரச்சினைகளை சரி செய்திருக்கலாம்.

எனவே இதுபோல் இனி எந்த ஒரு விபத்தும் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... கணிதத்தில் ஆண்கள் புத்திசாலிகளா? பெண்கள் புத்திசாலிகளா? - யுனெஸ்கோ அறிக்கை

SCROLL FOR NEXT