கைது 
உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லியில் ரூ.25 கோடி மதிப்பிலான பச்சை கல் லிங்கம் பறிமுதல்- 2 பேர் கைது

பூந்தமல்லியில் ரூ.25 கோடி மதிப்பிலான பச்சை கல் லிங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பேரை கைது செய்தனர்.

மாலை மலர்

சென்னை:

பூந்தமல்லி அருகே ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சை கல் லிங்கத்தை பதுக்கி வைத்திருந்ததாக பாலா, பாக்யராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வியாபாரிகள் போல நடித்து இந்த லிங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.