போரூர்:
சென்னை அசோக் நகர் புதூர் 8-வது தெரு பகுதியில் இரவு நேரங்களில் சாலையோரம் ஏராளமான கார் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் கஞ்சா போதையில் வந்த மர்ம கும்பல் ஒன்று அங்கிருந்த 2 கார் மற்றும் 2 ஆட்டோக்களையும் சரமாரியாக அடித்து நொறுக்கினர். சத்தம் கேட்டு பொது மக்கள் திரண்டதும் ரகளையில் ஈடுபட்ட கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மர்ம கும்பலை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.