மரக்காணம்:
மரக்காணம் அருகே லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 53). இவருக்கு அதே பகுதியில் நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்திற்கு இவரது உறவினரான வேல்முருகன் என்பவர் உரிமை கோரி கடந்த சில தினங்களாக சரஸ்வதியிடம் தகராறு செய்ததார்.
சம்பவத்தன்று சரஸ்வதி தனது நிலத்திற்கு சென்றுள்ளார் அப்போது அவரை வழிமறித்த வேல்முருகன் அவரிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டார். பின்னர் வேல்முருகன் கீழே கிடந்த கல்லால் சரஸ்வதியை தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து சரஸ்வதி பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார் புகாரின்பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து வேல் முருகனை கைது செய்தனர்.