சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:
பேரறிவாளன் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்காததற்காக தமிழக ஆளுனர் மாளிகையை கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆளுனரின் நிலை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கண்டித்திருக்கிறது.
உச்சநீதிமன்றம் இப்படி விமர்சிக்கும் நிலையை தமிழக ஆளுனர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது. 7 தமிழர் விடுதலை குறித்து ஆளுனர் மாளிகை முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும். ஆளுனர் 4 நாட்களில் சரியான பதிலளிக்கவில்லை என்றால் பேரறிவாளனை உச்சநீதிமன்றமே விடுதலை செய்யக்கூடும்.
பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தால் அது ஆளுனர் மாளிகைக்கு அவப்பெயர் தேடித்தரும். அந்த நிலையை தவிர்த்து ஆளுனர் மாளிகையின் மாண்பை காக்க பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுனர் உடனடியாக கையெழுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...டெல்லி அதிகாரம் யாருக்கு? - சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு, டெல்லி அரசு வாதம்