அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 
உள்ளூர் செய்திகள்

எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய 59 இடங்களில் 11 கிலோ தங்கம், ரூ.84 லட்சம் ரொக்கம் பறிமுதல்

எஸ்.பி.வேலுமணி பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் ரூ.34 லட்சம் முதலீடு செய்திருப்பதும் சோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்கள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.13 லட்சம் சிக்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 59 இடங்களில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், 11.153  கிலோ கிராம் தங்க நகைகள் மற்றும் கணக்கில் வராத ரூ.84 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT