உள்ளூர் செய்திகள்

புழல் ஜெயில் ஆயுள் தண்டனை கைதி மரணம்

சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முக சுந்தரம் இறந்தார். புழல் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மாலை மலர்

செங்குன்றம்:

ஆவடி அடுத்த அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது66). இவர் திருமுல்லைவாயலில் நடந்த ஒரு கொலையில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை கைதியாக புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முக சுந்தரம் இறந்தார்.

இது குறித்து புழல் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.