உள்ளூர் செய்திகள்

புழல் ஜெயில் கைதி திடீர் மரணம்

சென்னை, நந்தனத்தை சேர்ந்தவர் கணேசன். இவரை கடந்த நவம்பர் மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பணமோசடி வழக்கில் கைது செய்தனர். புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

சென்னை, நந்தனத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது56). இவரை கடந்த நவம்பர் மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பணமோசடி வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவர் புழல் ஜெயிலில் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு கணேசனுக்கு திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிேலயே கணேசன் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.