கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1200 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும் இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் 2வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட், 2வது நிலையின் 2வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT