உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவியுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்

திருமண ஆசை காட்டி ஏமாற்றுதல், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய உதயகுமாரை தேடி வருகின்றனர். உதயகுமாருக்கு திருமணமாகி, இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.

திருவொற்றியூர்:

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், தண்டையார்பேட்டை பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக்கொண்டே கல்லூரியில் படித்து வருகிறார்.

திருவொற்றியூர், காந்தி நகரை சேர்ந்த உதயபாஸ்கர். அடிக்கடி, அந்த பங்கிற்கு சென்று பெட்ரோல் நிரப்பி உள்ளார். அப்போது, அந்த இளம்பெண்ணிடம் நைசாக பேச்சுக்கொடுத்து பழகியுள்ளார்.

அந்த பெண்ணுக்கு காதல் வலை வீசி திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், அந்த பெண்ணுக்கு தெரியாமல் நெருங்கி பழகியதை தன் செல்போனில் வீடியோ எடுத்து வைத்து அவரை அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனால் அந்த பெண், பெற்றோரிடம் சொல்வதற்கு பயந்து, உதயபாஸ்கருடனான பழக்கத்தை துண்டித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற உதயபாஸ்கர், அவரை மிரட்டி தன்னுடன் வந்து தனிமையில் இருக்குமாறு மிரட்டினார். இல்லையென்றால், வீடியோவை வெளியிடுவேன் என கூறியுள்ளார். அந்த நேரத்தில் பெண்ணின், பெற்றோர், உறவினர்கள் அங்கு ஒன்று கூடி, உதயபாஸ்கரை சரமாரியாக அடித்து உதைத்தனர். அவரது மோட்டார் சைக்கிளையும் நொறுக்கினர். இதனால் பயந்துபோன உதயபாஸ்கர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து, திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், திருமண ஆசை காட்டி ஏமாற்றுதல், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய உதயகுமாரை தேடி வருகின்றனர். உதயகுமாருக்கு திருமணமாகி, இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இதை மறைத்து, கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இவர் எல்.எல்.பி. முடித்துள்ளார்.