தற்கொலை 
உள்ளூர் செய்திகள்

டி.வி.பார்த்ததை தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கொரட்டூர் அடுத்த பாடியில் டி.வி.பார்த்ததை தாய் கண்டித்ததால் மனவேதனை அடைந்த பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

அம்பத்தூர்:

கொரட்டூர் அடுத்த பாடி தேவர் நகர் திருவல்லீஸ்வரர் காலனியை சேர்ந்தவர் துளசி. இவரது மகள் ஹரிதா(வயது17). இவர் முகப்பேரில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை ஹரிதா வீட்டில் டி.வி.பார்த்து கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது அவரை தாய் கண்டித்து, படிக்காமல் எப்பொழுதும் டி.வி பார்த்துக்கொண்டு இருப்பதாக கூறினார்.

இதனால் மனவேதனை அடைந்த ஹரிதா வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.