திருவள்ளூர்:
திருத்தணியில் இருந்து திருவள்ளூர் வரை சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் சரக்கு வாகனங்களில், பயணம் செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சரக்கு வாகனங்களில் அறை அமைத்து பயணிகளை ஆபத்தான முறையில் அமர வைத்து அழைத்து செல்கிறார்கள்.
பெரும்பாலும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த ஆபத்தான பயணம் அதிக அளவில் நடைபெறுகிறது.
சரக்கு வாகனங்களில் பயணம் செய்வோரை வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரும், அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
பெரிய அளவில் ஆபத்து ஏற்படும் முன்பு இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.