தபால் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை 
உள்ளூர் செய்திகள்

திருவொற்றியூரில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து தபால் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

திருவொற்றியூரில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் திருவெற்றியூர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

திருவொற்றியூர்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வட சென்னை மாவட்டத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திருவெற்றியூர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு பாண்டிச்சேரி, சண்டிகர் மாநிலங்களில் பெட்ரோலுக்கு மானியம் வழங்குவது போல் தமிழகத்திலும் மானியம் வழங்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்