டால்பின் (கோப்பு படம்) 
உள்ளூர் செய்திகள்

பழவேற்காட்டில் டால்பின் கரை ஒதுங்கியது

கூனங்குப்பம் அருகே டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. இந்த அரியவகை டால்பின் கரை ஒதுங்கியது.

மாலை மலர்

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதி மீன்பிடி பகுதியாகும்.இங்கு நாள்தோறும் கடலில் மீனவர்கள் மீன் பிடித்து உடனடியாக பழவேற்காடு மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பழவேற்காடு பகுதி எஸ்.பி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மீன்பிடிக்க சென்று கடலில் மூழ்கி இறந்தார். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வில்லை.

இந்த நிலையில் இன்று லைட் ஹவுஸ் ஊராட்சிக்குட்பட்ட கூனங்குப்பம் அருகே டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. இந்த அரியவகை டால்பின் மீன் இறந்த நிலையில் காணப்பட்டது.