கைது 
உள்ளூர் செய்திகள்

தண்டையார்பேட்டையில் தாசில்தார் அலுவலகத்தில் சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு- 25 பேர் கைது

தண்டையார்பேட்டையில் தாசில்தார் அலுவலகத்தில் சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் சேனியம்மன் கோவில் அருகே மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

ராயபுரம்:

தண்டையார்பேட்டை, இரட்டை குழி தெருவில் தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கு அருகில் உள்ள திலகர் நகர் குடியிருப்பில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் சுற்றுச்சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் சேனியம்மன் கோவில் அருகே மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து 25 பேரை போலீசார் கைது செய்தனர்.