வழக்கு பதிவு 
உள்ளூர் செய்திகள்

போதை பொருட்கள் விற்பதாக புகார்- மருந்து கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

பொன்னம்மாப்பேட்டையில் உள்ள ஒரு கடையில் மருந்து சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கடை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாலை மலர்

சேலம்:

சேலம் பொன்னம்மாப்பேட்டை, வலசையூர், அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சில மருந்து கடைகளில் போதை மாத்திரை விற்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அம்மாப்பேட்டை போலீசாருடன் இணைந்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று 10-க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் சோதனை செய்தனர்.

அதில், பொன்னம்மாப்பேட்டையில் உள்ள ஒரு கடையில் மருந்து சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கடை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதேபோல், வலசையூரில் உள்ள ஒரு மருந்து கடை விதிமுறையை மீறி செயல்பட்டது கண்டறியப்பட்டது. அந்த கடையின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நடவடிக்கை சேலம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் என்றும், மேலும் இந்த சோதனை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.