அனல்மின் நிலையம் 
உள்ளூர் செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

முதல் யூனிட்டில் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கோளாறால் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலை மலர்

மீஞ்சூர்:

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த அனல்மின் நிலையத்தில் அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் முதல் யூனிட்டில் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கோளாறால் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.