அனல்மின் நிலையம் 
உள்ளூர் செய்திகள்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 620 மெகாவாட் மின் உற்பத்தியும், 2-வது நிலையத்தில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின்உற்பத்தியும் செய்யப்படுகிறது. தினமும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 1-வது நிலையின் 3-வது அலகில் டர்டன் பகுதியில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.