உள்ளூர் செய்திகள்

கடையத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை காஞ்சனா என்ற பெண்ணை விக்னேஷ் திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று ராமநதி அணைக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு கோவிலின் முன்பு விக்னேஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

Suresh K Jangir

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேலமாதாபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). கூலி தொழிலாளி.

இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை காஞ்சனா(20) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று ராமநதி அணைக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு கோவிலின் முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே அவரை உறவினர்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் பாளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விக்னேஷ் சரிவர வேலை செய்யாமல் இருந்து வந்ததாகவும், அதனை விக்னேசின் தாயார் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.