மிரட்டல் 
உள்ளூர் செய்திகள்

நந்தனத்தில் தொழில் அதிபருக்கு கொலை மிரட்டல்

நந்தனத்தில் தொழில் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை நந்தனம் அண்ணா சாலையில் அலுவலகம் வைத்து நடத்தி வருபவர் கமாலுதீன். இவர் உள் அலங்கார தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனது காரை எடுக்கும்போது அதே பகுதியில் இருசக்கர வாகன விற்பனை மையத்தில் பணிபுரியும் தினேஷ் என்பவர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கமாலு தீன் சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் இரு சக்கர வாகன விற்பனை மைய உரிமையாளரான பங்கஜ் என்பவர் தூண்டுதலின் பேரிலேயே தினேஷ் மிரட்டல் விடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT