போலீசார் விசாரணை 
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் மோட்டார் சைக்கிள் திருட்டு- போலீசார் விசாரணை

தஞ்சையில் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை இனாத்துக்கான்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுகுமாறன் (41). சம்பவத்தன்று இவர் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT