போரூர்:
கோயம்பேடு, காளியம்மன் கோவில் சாலையில் கழிவுநீர் வாரிய அலுவலகம் அருகே நேற்று இரவு முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் தலையில் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருக்கு சுமார் 60 வயது இருக்கும். அவர் யார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.