உள்ளூர் செய்திகள்

வில்லிவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு ஊழியர் பலி

சரவணன் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது இடிக்காமல் இருப்பதற்காக சரவணன் திடீரென பிரேக் பிடித்தார்.

Suresh K Jangir

அம்பத்தூர்:

கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையை சேர்ந்தவர் சரவணன்(வயது38). இவர் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை பிரிவில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இன்று அதிகாலை அவர் மோட்டார் சைக்கிளில் வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது இடிக்காமல் இருப்பதற்காக சரவணன் திடீரென பிரேக் பிடித்தார். இதில் கட்டுப்பாட்டை இழந்த அவர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த சரவணன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.