பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பெரும்பேடு குப்பம் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரூபா தேவி (வயது26). இவர்களது ஒன்றரை வயது மகள் ஏஞ்சல்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த ரூபாதேவி, தனது மகள் ஏஞ்சலுடன் வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து கார்த்திக் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.