மாயம் 
உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே குழந்தையுடன் தாய் மாயம்

நெல்லை அருகே குழந்தையுடன் தாய் மாயமானது தொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள திருப்பணி கரிசல்குளம் பகுதியில் உள்ள திருமால் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 45). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நந்தினி குமாரி (31). இவர்களுக்கு சீதாலட்சுமி (3) என்ற மகள் உள்ளார். நேற்று நந்தினிகுமாரி மகள் சீதாலட்சுமியுடன் கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றார். நீண்ட நேரம் அவர் திரும்பி வராததால் அவரது செல்போனுக்கு ராஜசேகர் தொடர்பு கொண்டார். அப்போது அது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடியும் நந்தினி குமாரியையும், சீதாலட்சுமியையும் எங்கும் காணவில்லை. இதனால் ராஜசேகர் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய்-மகளை தேடி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT