மோதல் 
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே பணத்தகராறில் நண்பர்கள் மோதல்- 2 பேர் காயம்

பண்ருட்டி அருகே பணத்தகராறில் நண்பர்கள் மோதிக்கொண்டதில் 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

மாலை மலர்

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே சிறுவத்தூர் 5வது தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது40). இவரும் பண்ருட்டி வேதபுரீஸ்வரர் நகரை சேர்ந்தவர் லோகேஷ் குமார்(44 என்பவரும் நண்பர்கள். லோகேஷ்குமார், நண்பர் ஜெயபிரகாஷிடம் ரூ.35000 பணம் வாங்கி உள்ளார்.

சம்பவத்தன்று அங்கு செட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டு இருந்த லோகேஷ்குமாரிடம் பணத்தை திருப்பி கேட்டபோது இனிமேல் உனக்கு பணம் தர முடியாது என்று ஆபாசமாக திட்டினார். இதனால் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

அப்போது லோகேஷ் குமாரும் அவருடைய மனைவி சவிதா ஆகியோர் கத்தி மற்றும் கல்லால் தாக்கினர்.

இந்த மோதலில் ஜெயப்பிரகாஷ், லோகேஷ் குமார் ஆகியோர் காயம் அடைந்தனர். காயமடைந்த இருவரும் பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றனர்.