போரூர்:
வடபழனி, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அக்ஷய் தாஸ். தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு அவர் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார்.
இந்த நிலையில் அதிகாலை 3 மணி அளவில் மர்மநபர் வீட்டுக்குள் புகுந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன் மற்றும் ரூ.5,500 ரொக்கம் ஆகியவற்றை சுருட்டிக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர், பேப்பர் மில் சாலையை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவரது வீட்டில் இருந்த லேப்டாப், செல்போனை மர்மநபர்கள் ஜன்னல் வழியாக திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து திரு.வி.க.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 6 மாதத்துக்கு பின்னர் அதே பகுதியை சேர்ந்த முக்தர் உசைன், லோகநாதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.