க.அன்பழகன் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை 
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி ஓட்டலில் அவரது உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மாலை மலர்

தூத்துக்குடி:

1977-ம் ஆண்டு முதல் 43 ஆண்டுகளாக தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும், 9 முறை எம்.எல்.ஏ.வாகவும், மக்களவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் நிதி அமைச்சராகவும் பணியாற்றியவர் க.அன்பழகன்.

மறைந்த க.அன்பழகனின் 2-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வந்துள்ளார். நேற்று இரவு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழுஉருவச் சிலையை திறந்து வைத்த அவர் அங்குள்ள சத்யா ரிசார்ட்டில் தங்கினார்.

முன்னாள் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி ஓட்டலில் அவரது உருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் இன்று காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து மாநில மகளிரணி செயலாளர் கனி மொழி எம்.பி., அமைச் சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன், மனோ தங்கராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா ஆகியோரும் க.அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.