டிரைவர் மரணம் 
உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே லாரியில் டிரைவர் திடீர் மரணம்

மீஞ்சூர் அருகே லாரியில் டிரைவர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

நாமக்கல் அடுத்த கொசவன்பேட்டை பாரதி நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 53). லாரி டிரைவர்.

இவர் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் லோடு ஏற்றுவதற்காக லாரியை ஓட்டி வந்திருந்தார். பின்னர் குடோனுக்கு செல்வதற்காக மற்ற லாரிகளுடன் வண்டியை வரிசையாக நிறுத்தி இருந்தார்.

அப்போது ராமசாமி ஓட்டி வந்த லாரி இயக்கப்படாமல் நீண்ட நேரம் அப்படியே நின்றது. இதனால் சந்தேகம் அடைந்த பின்னால் மற்றொரு லாரியில் இருந்த டிரைவர் வந்து பார்த்தார். அப்போது ராமசாமி லாரியிலேயே இறந்து கிடந்தார்.

இது குறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாரடைப்பு காரணமாக ராமசாமி இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.