உள்ளூர் செய்திகள்

மினி மாரத்தானில் பங்கேற்று ஓடிய அமைச்சர்கள்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கன்னியாகுமரி வந்தார்.தனிநபர் மினி மாரத்தானில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார்.

கன்னியாகுமரி:

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். அங்கு வந்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு அங்குள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இன்று அதிகாலை 4 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் இருந்து காணிமடம் வரை உள்ள 21.4 கிலோ மீட்டர் தூரம் நடந்த தனிநபர் மினி மாரத்தானில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார். அவருடன் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு ஓடினார்.

கன்னியாகுமரியில் நடந்த இந்த மினி மாரத்தானில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் 148-வது முறையாக ஓடி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

SCROLL FOR NEXT