ஆவின் பொருட்கள் 
உள்ளூர் செய்திகள்

இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய முடிவு- அமைச்சர் நாசர்

பால்வளத்துறையில் பத்தாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்ட வாணிபம் இப்போது தலைதூக்கி உள்ளது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

தமிழகத்தில் இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டசபையில் பேசிய அமைச்சர் நாசர் மேலும் கூறியதாவது:-

இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரம் ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டு ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பால்வளத்துறையில் பத்தாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்ட வாணிபம் இப்போது தலைதூக்கி உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மட்டும் ரூ.87 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. தினமும் குப்பை அள்ளும் பணி, கொசுமருந்து அடிப்பதை கண்காணிக்க வேண்டும்- கவுன்சிலர்களுக்கு மேயர் அறிவுறுத்தல்