உள்ளூர் செய்திகள்

ஆண்டிபட்டியில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி

மோட்டார் சைக்கிளில் கணவாய் பகுதியில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த லாரி மீது அவர் பயங்கரமாக மோதினார்.விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Maalaimalar

ஆண்டிபட்டி, செப்.23-

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் அல்லாபக்ஸ் (வயது 41). இவர் அதே பகுதியில் பீரோ, கட்டில் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரூபியாபானு (33) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ரூபியாபானு கடந்த சில தினங்களுக்கு முன்பு குழந்தைகளுடன் கம்பத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். மீண்டும் அவரை அழைத்துச் செல்வதற்காக அல்லாபக்ஸ் மோட்டார் சைக்கிளில் மாமியார் வீட்டிற்கு வந்தார்.

மோட்டார் சைக்கிளில் கணவாய் பகுதியில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த லாரி மீது அவர் பயங்கரமாக மோதினார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.***அல்லாபக்ஸ்.