உள்ளூர் செய்திகள்

மறைமலைநகரில் வன்னியர் சங்க மாவட்ட தலைவரை வெட்டிக் கொல்ல முயற்சி

மறைமலைநகரை அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளி.தனியார் வங்கி அருகே வந்த போது மர்ம கும்பல் காளியை வழிமறித்தனர்.

மறைமலைநகரை அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காளி. இவர் செங்கல்பட்டு மாவட்ட வன்னியர் சங்க தலைவராக உள்ளார். இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் மறைமலைநகரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அங்குள்ள தனியார் வங்கி அருகே வந்த போது மர்ம கும்பல் காளியை வழிமறித்தனர். திடீரென அவர்கள் கத்தி, அரிவாளால் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த காளி அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனாலும் மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த காளி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் காளி பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT