உள்ளூர் செய்திகள்

மறைமலைநகரில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வழக்கில் 2 பேர் கைது

மறைமலைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் திருடியது தெரியவந்தது.போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மறைமலைநகர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது குறித்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மறைமலைநகர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த 2 வாலிபர்களை போலீசார் வழிமறித்து விசாரித்த போது முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் படப்பை அருகே உள்ள சிறுமாத்தூர் கிராமத்தை சேர்ந்த பூபாலன் (வயது 37), ஆத்தனஞ்சேரி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (29) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து மறைமலைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றினர்.

SCROLL FOR NEXT