சென்னை:
மக்கள் நீதி மய்யம் சார்பில் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளுக்கு மூன்று ஆயுள் தண்டனையும், குற்றம் நிரூபிக்கப்பட்ட இதர 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சற்றே தாமதிக்கப்பட்ட நீதியெனினும் சாதி ஆணவத்திற்கு எதிரான சவுக்கடியாக தீர்ப்பு வெளியாகியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.