திருட்டு 
உள்ளூர் செய்திகள்

மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திர விழாவில் பக்தரிடம் திருட்டு

மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திர விழாவில் பக்தரிடம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

இதேபோல் சென்னை அம்பத்தூர் திருவள்ளுவர் நகர் பகவத்சிங் தெருவை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் நேற்று இரவு குடும் பத்தாருடன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.

இன்று காலை கோயில் தெப்பக்குளத்தில் குளிப்பதற்காக பணம் மற்றும் செல்போன்களை ஒரு பையில் வைத்தார். பின்னர் அதனை குளத்தின் படியில் வைத்துவிட்டு குளித்தார். . உடன் வந்தவர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர்கள் பையை திருடி சென்றுள்ளனர்.

குளித்துவிட்டு வந்து அவர் பார்த்தபோது பையை காணவில்லை மேலும் பேக்கில் 8 ஆயிரம் ரூபாய் பணம், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 செல்போன்களையும் காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.