உயிருக்கு போராடிய காதலனும் பலி 
உள்ளூர் செய்திகள்

சூளையில் காதல் ஜோடி தீக்குளிப்பு - உயிருக்கு போராடிய காதலனும் பலி

சூளையில் காதல் ஜோடி தீக்குளித்த சம்பவத்தில் பெண் பலியான நிலையில் உயிருக்கு போராடிய காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாலை மலர்

சென்னை:

சென்னை சூளையில் அடுக்குமாடி குடியிருப்பில் திருமணம் செய்யாமல் வசித்து வந்த காதல் ஜோடியான சந்தீப், இளைச்சி ஆகியோர் நேற்று முன்தினம் தீக்குளித்தனர்.

இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி இருந்தது. இந்த நிலையில் தான் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 3-வது திருமணத்திற்கு இளைச்சி முயற்சித்ததால் மோதல் ஏற்பட்டு இருவரும் தீக்குளித்தனர். இதில் இளைச்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சந்தீப் ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.