பொதுத் தேர்வு 
உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு எண் பட்டியல் நாளை வெளியீடு

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான எண்ணுடன் கூடிய பெயர் பட்டியல் வெளியிடுவது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

மாலை மலர்

தமிழகத்தில் வரும் மே மாதம் 6-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெறுகிறது. 10-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்புக்கு ஜூன் 17-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான எண்ணுடன் கூடிய பெயர் பட்டியல் வெளியிடுவது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு எண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியலை நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தேர்வு எண் பட்டியலை  http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு மீண்டும் புதிய கப்பல்கள் -அமைச்சர் தலைமையில் ஆலோசனை