கைது 
உள்ளூர் செய்திகள்

தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

சாராயம் விற்பனை செய்து வந்த வியாபாரியின் செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.

மாலை மலர்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா எண்டியூரை சேர்ந்தவர் வேம்பன் மகன் குணசேகர் (வயது 41). இவர் மீது பிரம்மதேசம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சாராயம் விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் குணசேகரை பிரம்மதேசம் போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் சாராய வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் குணசேகரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். இதையடுத்து குணசேகரை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.